தனுஷ் 56வது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ADDED : 193 days ago
நடிகர் தனுஷ் கைவசம் ‛இட்லி கடை, குபேரா, தேரே இஸ்க் மெயின்' ஆகிய படங்கள் உள்ளன. இவை அல்லாமல் ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, தமிழரசன் பச்சமுத்து போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் தனுஷ், இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் கர்ணன் படம் வெளியாகி 4 வருடங்கள் நேற்றோடு நிறைவு பெற்ற நிலையில் இப்போது தனுஷின் 56வது படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு போஸ்டரில் வாள் ஒன்றும், அதன் கைப்பிடியில் மண்டோடும் உள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இது வரலாற்று படம் என கூறப்படுகிறது.