உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு!

நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு!


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‛குட் பேட் அக்லி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா. கடந்த பத்தாம் தேதி திரைக்கு வந்த இந்த படம் முதல் நாளே 50 கோடி வசூலித்த நிலையில், நேற்று 100 கோடி வசூலை கடந்துள்ளது. இந்த நிலையில், இந்த படத்தில் அஜித் மட்டும் இன்றி திரிஷாவின் நடிப்பையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அவர் சிறப்பாக நடித்த காட்சிகளை சுட்டிக்காட்டி அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதனால் மகிழ்ச்சி அடைந்த திரிஷா, நன்றி மாமே என்று கேப்ஷனுடன் ஒரு பதிவு போட்டுள்ளார். கூடவே நடிகர் பிரபு மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் திரிஷா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !