சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்!
ADDED : 146 days ago
இன்றைய தலைமுறை சென்சேஷன் ஆக மாறியுள்ளார் இசையமைப்பாளர் சாய் அபியன்கர். இவர் இரண்டு மூன்று ஆல்பம் பாடல்களை மட்டுமே இசையமைத்தார். இதை தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் இசையமைக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார்.
இந்த வரிசையில் நடிகர் சிலம்பரசன் தற்போது அவரது 49வது படமாக பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பை வட இந்தியாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தொடங்கவுள்ளனர். இந்த நிலையில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்திற்கு இசையமைக்க சாய் அபியன்கர் இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.