ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ADDED : 214 days ago
‛பார்க்கிங், லப்பர் பந்து' என தொடர்ச்சியாக இரு வெற்றி படங்களை கொடுத்துவிட்டார் ஹரிஷ் கல்யாண். தற்போது அவர் கைவசமாக ‛நூறு கோடி வானவில், டீசல்' ஆகிய படங்கள் உள்ளன.
இவை அல்லாமல் ‛லிப்ட்' பட இயக்குனர் வினித் வர பிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் தனது 15வது படத்தில் நடித்து வருகிறார். இதனை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார். மலையாளம் நடிகர் செம்பியான் வினோத் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.