நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்!
நடிகர்கள் சந்தானம் மற்றும் சூரி கடந்த பல வருடங்களாக நகைச்சுவை கதாப்பாத்திரத்தை தவிர்த்து கதாநாயகனாக நடித்து வருகிறார்கள். அதேபோல் சூரியும் ‛விடுதலை' படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த வரிசையில் ‛விலங்கு' வெப்சீரிஸ் மூலம் கவனம் பெற்ற பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள 'மாமன்' எனும் படத்தில் சூரி நடித்துள்ளார். இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மியும், முக்கிய வேடத்தில் நடிகர் ராஜ்கிரணும், நடிகை சுவாசிகாவும் நடிக்கின்றனர்.
இன்று தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாமன் படம் வருகின்ற மே 16ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். ஏற்கனவே இதே தேதியில் சந்தானம் நடித்துள்ள ‛டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் திரைக்கு வருகிறது என அறிவித்தனர். இதன் மூலம் சூரி, சந்தானம் இருவரின் படமும் முதல்முறையாக நேருக்கு நேர் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.