மேலும் செய்திகள்
நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2'
146 days ago
செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு
146 days ago
அஜித் குமார், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் ஏப்ரல் 10ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. முதல் நாள் வசூலாக தமிழகத்தில் மட்டும் 30 கோடி வசூலித்ததாக அறிவித்தார்கள். அதன்பின் படம் பற்றிய அதிகாரப்பூர்வமான வசூல் அறிவிப்பு வெளியாகவில்லை.
படம் வெளியான முதல் வார இறுதி தொடர் விடுமுறை நாட்களுடன் நேற்றோடு முடிவுக்கு வந்தது. நேற்று வரையில் இப்படம் சுமார் 170 கோடி வசூலைக் கடந்திருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் மூலம் இந்த 2025ம் ஆண்டில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு 'டிராகன்' படம் 150 கோடி வசூலித்ததுதான் சாதனையாக இருந்தது.
அஜித் நடித்து இதற்கு முன்பு வெளியான படங்களில் 'துணிவு' படம் 200 கோடி வசூலைக் கடந்த படமாக முதலிடத்தில் இருக்கிறது. அதற்கடுத்து 'விஸ்வாசம்' படம் 200 கோடியை நெருங்கியுள்ளது.
மீண்டும் இந்த வாரம் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை நாள். அதற்கடுத்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள். இடையில் இன்றும் அடுத்த இரண்டு நாட்களும் இந்தப் படம் தாக்குப் பிடித்துவிடும். எனவே, இந்த வாரத்தின் இறுதியில் இப்படம் 200 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு 'துணிவு' வசூலையும் முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
146 days ago
146 days ago