உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம்

அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம்


அஜித் நடித்து சமீபத்தில் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வசூலில் சக்கை போடு போடுகிறது. தமிழகத்தில் மட்டும் முதல் 2 நாட்களில் சுமார் 45 கோடி வரை வசூலித்துள்ளது. இதை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை யார் எடுக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. நமக்கு கிடைத்த தகவலின்படி அஜித்தை வைத்து அடுத்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமே அஜித்தை அணுகியதாகவும் அதற்கு அஜித் பச்சைக்கொடி காட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.

குட் பேட் அக்லி திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டதும் இதே நிறுவனமே. இந்த படத்தின் வசூல் வேட்டையால் அஜித் மீது நம்பிக்கை வைத்து அடுத்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் இந்த படத்தை இயக்குவது யார் என்று முடிவாகவில்லை. ஒரு வேலை ஆதிக் ரவிச்சந்திரனே இந்த படத்தை எடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !