பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த்
மிகப்பெரிய ஏற்றங்களும், மிகப்பெரிய இறக்கங்களும் கொண்டது விஜயகாந்த் சினிமா வாழ்க்கை. சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி காத்திருந்தாள் படத்திற்கு பிறகு அவரது திரை வாழ்க்கை முற்றிலும் மாறியது. ரஜினி, கமல் இருவரும் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், தனக்கென தனி பாதை போட்டு வெற்றி படங்களை கொடுத்தவர் விஜயகாந்த்.
1984ம் ஆண்டு, விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டு. அந்த வருடத்தில் மட்டும் 18 படங்களில் நடித்தார் விஜயகாந்த். குழந்தை யேசு, சபாஷ், தீர்ப்பு என் கையில், நல்லநாள், நாளை உனது நாள், நூறாவது நாள், மதுரை சூரன், மெட்ராஸ் வாத்தியார், வீட்டுக்கு ஒரு கண்ணகி, வெள்ளைப் புறா ஒன்று, வெற்றி, வேங்கையின் மைந்தன், ஜனவரி 1, குடும்பம், சத்தியம் நீயே, மாமன் மச்சான், உள்பட அந்த வருடத்தில் மொத்தம் 18 படங்களில் நடித்தார் விஜயகாந்த். இந்தப் படங்களுடன்தான் விஜயகாந்துக்கு திருப்பம் தந்த 'வைதேகி காத்திருந்தாள்' படமும் வெளிவந்தது.