உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல்

'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல்


சுந்தர் சி எழுதி இயக்கிருக்கும் திரைப்படம் 'கேங்கர்ஸ்'. இந்த படத்தில் சுந்தர் சி.,யுடன் சேர்ந்து வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் 24ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சுமார் 500 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தற்போது இந்த படத்துக்காக தியேட்டர்களின் புக்கிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பல தியேட்டர்கள் இன்னும் இந்த படத்திற்கான புக்கிங் பணிகளை துவக்கவில்லை. பல தியேட்டர் உரிமையாளர்கள், அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் நல்ல வசூலை குவிப்பதால் இந்த படத்தை இப்போது தமது தியேட்டரில் போடுவதற்கு யோசித்து வருகின்றனர்.

இதனால் இன்னும் நாட்கள் இருக்கிறது நாம் பொறுமையாக பார்த்து கொள்ளலாம் என்ற பதிலை தருவதாகவும் தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கேங்கர்ஸ் திரைப்படத்திற்கு தமிழகத்தில் எதிர்பார்த்த தியேட்டர்கள் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !