உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்'

தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்'

சீனு ராமசாமி இயக்கிய இடம் பொருள் ஏவல், இடி முழக்கம் ஆகிய படங்கள் பல ஆண்டுகளாக வெளிவராமல் முடங்கி கிடந்தது. இதில் தற்போது 'இடி முழக்கம்' படம் தூசி தட்டி எடுக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் முபாரக் தயாரித்துள்ள இந்த படத்தில், ஜிவி பிரகாஷ் குமார் இறைச்சி கடை உரிமையாளராகவும், காயத்ரி சங்கர் செவிலியராகவும் நடித்துள்ளனர். சரண்யா பொன்வண்ணன், அருள்தாஸ், சவுந்தரராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தின் பாடல்களை வெளியிட்டு புரமோஷன் பணிகளை தொடங்கி வைத்துள்ளார் விஜய் சேதுபதி.

தென்மாவட்ட மக்களின் வாழ்வியலை ஆக்ஷன் மற்றும் சென்டிமெண்ட் கலந்து இந்த படம் உருவாகி உள்ளது. அடுத்த மாதம் வெளியாகும் வகையில் பணிகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !