உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்'

4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்'

ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர்களது திரையுலக பயணத்தில் மைல்கல் என்று சொல்லும் விதமாக ஒரு படம் அமைந்துவிடும். அப்படி விஜயகாந்த்துக்கு அமைந்த படம் 'கேப்டன் பிரபாகரன்'. நூறாவது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. அதுமட்டுமல்ல, காலத்திற்கும் நிலைக்கும் விதமாக கேப்டன் என்கிற அடைமொழியையும் சேர்த்து அவருக்கு பரிசளித்தது கேப்டன் பிரபாகரன்.

இந்த படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது. 4கே தரத்திலும் மற்றும் 7.1 சவுண்ட் மிக்ஸிங் முறையிலும் ரீமாஸ்டர் செய்யப்பட்டு வெளியாகிறது. முருகன் பிலிம் பேக்டரி மற்றும் ஸ்பேரோ சினிமாஸ் சார்பாக கார்த்திக் வெங்கடேசன் வெளிடுகிறார்.

ஆர்கே செல்வமணி இயக்கிய இந்த படத்தில் சரத்குமார், மன்சூர் அலிகான், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். ராஜராஜன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !