‛மதராஸி' படம் செப்.5ம் தேதி திரைக்கு வருகிறது
ADDED : 256 days ago
அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் படம் ‛மதராஸி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் சிவகார்த்திகேயனின் 23வது படமாக வெளியாக உள்ளது. இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். வித்யூத் ஜம்வால், விக்ராந்த், சபீர், பிஜூ மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிரூத் இசையமைக்க, ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி படம் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.