மேலும் செய்திகள்
மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன்
171 days ago
முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம்
171 days ago
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
171 days ago
தமிழ் மற்றும் மலையாள தயாரிப்பாளர் ஷிபுவின் மகன் ஹாருண். இங்கு மற்றும் சில மலையாள படங்களில் நடித்துவிட்டு மீண்டும் தமிழுக்கு வருகிறார். அறிமுக இயக்குநர் பைசல் எழுதி இயக்கும் 'மைனே பியார் கியா' எனும் இந்த படம் தமிழ், மலையாளத்தில் தயாராகிறது.
இந்த படத்தை ஸ்பைடர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சஞ்சு உன்னிதன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் பிரீத்தி முகுந்தன் மலையாளத்தில் அறிமுகமாகிறார். தெலுங்கில் அறிமுகமான இவர் தற்போது அங்கு கண்ணப்பா படத்தில் நடித்துள்ளார். தமிழில் ஸ்டார் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர்களுடன் ஜியோ பேபி, ஸ்ரீகாந்த் வெட்டியார், ரெடின் கிங்ஸ்லி, பாபின் பெரும்பில்லி, திரி கண்ணன், மைம் கோபி, குத்து சண்டை வீரர் தீனா, ஜனார்த்தனன், ஜெகதீஷ், ஜிவி ரேக்ஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
171 days ago
171 days ago
171 days ago