ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா
ADDED : 184 days ago
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'ரெட்ரோ'. அவருடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படம் மே 1ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இந்த படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக 'கனிமா' எனும் பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி டிரெண்ட் ஆகி உள்ளது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி அன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக அறிவித்துள்ளனர்.