உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு

ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு


மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், கமல்ஹாசன், திரிஷா, சிலம்பரசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. ஜுன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது.

அதற்காக வெளியிட்டுள்ள வீடியோ புரோமோ, போஸ்டர் ஆகியவற்றின் மூலம் அது 'ஜிங்குச்சா' பாடல் என்பதும், அதில் கமல், சிம்பு இருவரும் இணைந்து நடனம் ஆடியிருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. இருவருமே நடனத்தில் தனித் திறமை வாய்ந்தவர்கள்.

ஒரு சூப்பர் சீனியர் நடிகரும், ஒரு சீனியர் நடிகரும் சேர்ந்து நடிப்பதும், நடனமாடுவதும் தமிழ் சினிமாவில் அபூர்வம். ஒரு வித்தியாசமான காம்பினேஷன் இந்தப் படத்தில் கமல், சிம்பு மூலமாக இடம் பெற்றுள்ளது. அதனால், இந்த முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடலே ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !