மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
167 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
167 days ago
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து கடந்த வாரத்தில் திரைக்கு வந்த படம் குட் பேட் அக்லி. தற்போது வரை உலகளவில் ரூ.200 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இதனால் இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த திரைப்படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர். அந்த வகையில் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் விழாவின் மேடையில் பேசியதாவது, எங்க இருந்து ஆரம்பிப்பது என்பது தெரியவில்லை. இன்றைக்கு சுரேஷ் சந்திரா குழு நிற்கும் இடத்தில் தான் 11 வருஷத்துக்கு முன்னாடி நான் நின்னுட்டு இருப்பேன். இன்றைக்கு இந்த இடத்துல இருக்கேன். அஜித் சார் 2013ல் இருந்து என் மேல நம்பிக்கை வச்சிருக்கிறார். அவர்தான் இந்த படத்திற்காக என்னை ஆதிக்கிடம் சொல்லியுள்ளார். ஜாமி கதாபாத்திரத்தை நல்லபடியாக கையாண்டதற்கு பிரியாவுக்கு நன்றி. நான் அஜித் சாரோட எல்லா படத்தின் போஸ்டரையும் நான் ஷேர் செய்வேன். அப்படி ஒரு நாள் சுரேஷ் சந்திராவிடம் இருந்து எனக்கு கால் பண்ணி, 'ஆதிக் மீட் பண்ணனும்னு சொன்னாரு. போய் பாருங்கனு' சொன்னார் அப்படித்தான் இந்த வாய்ப்பு கிடைச்சது. என இவ்வாறு கூறினார் .
167 days ago
167 days ago