7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம்
ADDED : 191 days ago
கன்னட சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் கிச்சா சுதீப். கடந்த 2018ம் ஆண்டில் அனூப் பண்டாரி இயக்கத்தில் சுதீப் கதாநாயகனாக 'பில்லா ரங்கா பாட்ஷா' (சுருக்கமாக BRB) என்கிற தலைப்பில் ஒரு படத்தை அறிவித்தார். இது 2209 காலகட்டத்தில் நடைபெறும் கதைகளத்தை மையப்படுத்தி உருவாகிறது என குறிப்பிட்டனர். கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளதாக படக்குழு அறிவித்தனர். இதற்கிடையில் பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை படக்குழு தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.