பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர்
ADDED : 186 days ago
பிரமாண்டத்தின் இயக்கத்தில், உலக நடிகர் நடித்த, 'சூப்பர் ஹிட்' படத்தின், இரண்டாம் பாகம், 'அட்டர் பிளாப்' ஆகிவிட்டதால், அதன் மூன்றாம் பாகத்தில் நடிப்பதில் ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறார், உலக நடிகர்.
இன்னும், 20 நாட்கள் மட்டுமே அப்படத்தின் படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளதால், படக்குழு அவரிடம், 'கால்ஷீட்' கேட்டு துரத்தி வருகிறது. ஆனால், உலக நடிகரோ, அப்படத்தில் நடிப்பதில் பெரிதாக ஆர்வம் இல்லாததால் பிடிகொடுக்காமல், இழுத்தடித்து வருகிறார். இதன் காரணமாக உலக நடிகர் மீது அப்பட நிறுவனமும், பிரமாண்ட இயக்குனரும் கடுமையான அதிருப்தியில் இருக்கின்றனர்.