காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு, பின்னர் பிரிந்தார்கள். நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா துலிபலாவை அடுத்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகை சமந்தாவுக்கும், 'த பேமிலி மேன், சிட்டாடல்' ஆகிய வெப் தொடர்களை இயக்கிய ராஜ் நிடிமோரு இருவருக்கும் காதல் என்று கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அத்தொடர்களில் நடிக்கும் போது சமந்தாவுக்கும், ராஜுவுக்கும் காதல் மலர்ந்ததாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் இருவரும் சில இடங்களுக்கு ஒன்றாகவே சென்றார்கள்.
இதனிடையே, தற்போது திருப்பதிக்கு இருவரும் இணைந்து சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்கள். அடுத்து காளஹஸ்தி கோயிலுக்குச் சென்று ராகு, கேது பூஜையையும் சமந்தா செய்துள்ளார்.
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்து மதத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர் சமந்தா. வட இந்தியாவில் உள்ள கோவில்கள், தமிழகத்தில் பழனி கோவில், இதற்கு முன்பும் திருப்பதிற்கு பல முறை என சென்று வந்துள்ளார்.
சமந்தா, ராஜு விரைவில் திருமணம் செய்து கொள்ளவே தற்போதைய பூஜைகள் என்கிறார்கள்.