குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம்
ADDED : 172 days ago
அஜித் குமார் நடித்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டியிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் இரண்டாம் வாரம் முடிவிலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ரசிகர்களையும் தாண்டி பொதுவான சினிமா ரசிகர்களையும் இந்த திரைப்படம் வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த திரைப்படம் கடந்த 11 நாட்களில் கிட்டத்தட்ட 150 கோடியை நெருங்கியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 260 கோடியை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் நடித்த படங்களிலேயே தமிழகத்தில் அதிக வசூல் பெற்ற திரைப்படமாக இந்த குட் பேட் அக்லி அமைந்துள்ளது. மேலும் கோடை விடுமுறை இருப்பதால் இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க கூடும் என்பதே தமிழகத்தில் உள்ள பல திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக நிலவுகிறது.