மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
139 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
139 days ago
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'நிழற்குடை'. வருகிற மே மாதம் 9ம் தேதி திரைக்கு வருகிறது. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் தர்ஷன் சிவா, இளவரசு, ராஜ்கபூர் மனோஜ் குமார், வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் சிவா ஆறுமுகம் கூறும்போது குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படமாக உருவாகி உள்ளது. குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கதையில் இருக்கிறது. பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள். ஆனால் என் படத்தில் நடித்துள்ள குழந்தைகள் இருவருமே தேவயானிக்கு ஈடு கொடுத்து இயல்பாக நடித்துள்ளார்கள்.
நான் முதன் முதலாக உதவி இயக்குநராக பனியாற்றிய படம் 'தொட்டாசினுங்கி'. அந்த படத்தில் தான் தேவயானியும் கதாநாயகியாக அறிமுகமானார். பல வருடங்களுக்கு பின் நான் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும், தேவயானி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
139 days ago
139 days ago