உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு!

முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு!


பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று கோல்கட்ட - குஜராத் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி முதல் பேட்டிங்கில் 198 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் ஓபனர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் களமிறங்கி அரைசதம் அடித்தார்கள். இந்நிலையில் இந்த இருவரில் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக அவரை பாராட்டி நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், 'நீங்கள் இன்னும் முன்னேறி செல்லுங்கள். உங்களை இந்திய அணியின் ஜெர்சியில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !