மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
136 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
136 days ago
தெலுங்கில் அசோக் தேஜா இயக்கத்தில் தமன்னா கதையின் நாயகியாக நடித்து கடந்த ஏப்ரல் 17ம் தேதி திரைக்கு வந்த படம் 'ஒடேலா- 2'. ஆன்மிக கதையில் உருவான இந்த படத்தில் தமன்னா பெண் சாமியார் வேடத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் உருவான இந்த படத்தை ஹிந்தியிலும் வெளியிட்டார்கள். இப்படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகமும் பெரிய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்மறையான விமர்சனங்களால் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
குறிப்பாக, இந்த படத்தில் இடம்பெற்ற ஆன்மிக காட்சிகள் இயற்கைக்கு மாறாக இருந்ததாகவும், திரில்லர் காட்சிகள் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது. இந்த படத்தின் புரமோஷனில், இப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து தனது மார்க்கெட்டில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறி வந்த தமன்னாவுக்கு படத்தின் தோல்வி பலத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
136 days ago
136 days ago