மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
161 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
161 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
161 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
161 days ago
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான தெலுங்குப் படம் 'புஷ்பா 2'. பான் இந்தியா படமாக வெளியாகி வசூலை அள்ளிக் குவித்தது. 1700 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதன்பின் ஓடிடி தளத்திலும் வெளியாகி கோடிக்கணக்கான நிமிடங்கள் பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் டிவி ஒளிபரப்பு சமீபத்தில் நடந்தது. அதற்குரிய ரேட்டிங் வெளிவந்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 'புஷ்பா 2' படத்திற்கான டிவி ரேட்டிங் 12 புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளது. இது 'புஷ்பா 1' படத்திற்குக் கிடைத்த ரேட்டிங்கான 22 புள்ளிகளை விட மிகவும் குறைவு.
அல்லு அர்ஜுன் நடித்து வெளியான 'அலா வைகுந்தபுரம்லோ' படம் முதல் டிவி ஒளிபரப்பில் பெற்ற ரேட்டிங் 29 புள்ளிகள். அவற்றுடன் ஒப்பிடும் போது இவ்வளவு பிரம்மாண்டமாகத் தயாரான 'புஷ்பா 2', அவ்வளவு கோடிகள் வசூலித்தும் டிவி ரேட்டிங்கில் இப்படி குறைந்து போனதற்கான காரணத்தை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அலசிக் கொண்டிருக்கிறார்கள்.
161 days ago
161 days ago
161 days ago
161 days ago