மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
132 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
132 days ago
டிரெயின், ஏஸ் மற்றும் பாண்டிராஜ் இயக்கும் படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்தை பூரி ஜெகநாத்துடன் இணைந்து நடிகை சார்மியும் தயாரிக்கிறார். பாலிவுட் நடிகைகள் தபு, ராதிகா ஆப்தே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் பஹத் பாசிலை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் ஐந்து மொழிகளில் உருவாவதால் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பரிட்சயமான ஒரு வில்லன் நடிகர் நடித்தால் படத்துக்கு பிளஸ் பாயிண்டாக இருக்கும் என்பதால் பஹத் பாசிலை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.
132 days ago
132 days ago