கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு?
ADDED : 185 days ago
அரண்மனை 4 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கி 12 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்து, கடந்த பொங்கல் தினத்தில் திரைக்கு வந்த மதகஜராஜா படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக சுந்தர்.சி இயக்கி வடிவேலுவுடன் இணைந்து நடித்து கடந்த 24ம் தேதி திரைக்கு வந்த கேங்கர்ஸ் படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இந்த நிலையில் உலகம் முழுக்க 600 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ள இந்த படம் திரைக்கு வந்த முதல் நாளில் உலக அளவில் இரண்டு கோடி வசூலித்த நிலையில், நேற்று இரண்டாவது நாள் 2.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அந்த வகையில் இரண்டு நாளில் மொத்தம் 4.2 கோடி ரூபாய் கேங்கர்ஸ் படம் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகி உள்ளது.