உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜெயிலர்' வசூலை தாண்டுமா 'குட் பேட் அக்லி'

'ஜெயிலர்' வசூலை தாண்டுமா 'குட் பேட் அக்லி'


அஜித்குமார் நடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்த திரைப்படம் முதல் இரண்டு வாரங்களில் தமிழகத்தில் மட்டும் சுமார் 172 கோடி வசூலித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் 8 கோடிக்கு வசூல் செய்துள்ளது, இதனால் இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 180 கோடியை கடந்து தமிழக திரைப்பட வசூல் வரலாற்றில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் அதிக வசூல் செய்த வரலாற்றில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் மட்டுமே சுமார் 200 கோடியை கடந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள நாட்களில் இந்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் 'ஜெயிலர்' படத்தின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னும் விடுமுறை நாட்கள் இருப்பதால் ஜெயிலர் சாதனையை முறியடிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !