ஓடிடியில் தமிழில் வரவேற்பு குறைந்த மோகன்லாலின் 'எம்புரான்'
ADDED : 205 days ago
மோகன்லால் நடித்து பிரித்விராஜ் இயக்கிய திரைப்படம் எம்புரான். இந்த திரைப்படம் கடந்த மார்ச் 27ல் திரையரங்கில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சக்கைப்போடு போட்டது. இந்த திரைப்படம் சென்ற வாரம் ஏப்ரல் 24ல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. மொத்தம் நான்கு மொழி பதிப்புகளில் வெளியான இந்த திரைப்படம் தமிழில் மட்டும் பெரிய வரவேற்பை பெறவில்லை. மற்ற மொழிகளின் பதிப்புகளை காட்டிலும் தமிழ் பதிப்பில் குறைவான பார்வையாளர்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.