உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் தொடர் வரவேற்பில் டிராகன்

ஓடிடியில் தொடர் வரவேற்பில் டிராகன்

பிரதீப் ரங்கநாதன், கயாடு லோகர், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. இதை தொடர்ந்து இந்த திரைப்படம் மார்ச் 21 அன்று நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 21 அன்று வெளியாகியது.

கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்த நிலையிலும் இந்த திரைப்படத்துக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் படக்குழு மிகுந்த சந்தோஷத்தில் மிதந்துள்ளனர். சாதாரண கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை இந்தளவுக்கு ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று நெட்ப்ளிக்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !