உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அப்பாவுக்கு பத்மஸ்ரீ, மகனுக்கு பத்மபூஷன்

அப்பாவுக்கு பத்மஸ்ரீ, மகனுக்கு பத்மபூஷன்


இந்திய அளவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருதுகளாகக் கருதப்படுவது 'பத்ம' விருதுகள். முதற்கட்ட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது.

தமிழ் நடிகர் அஜித், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, ஹிந்தி நடிகர் சேகர் கபூர், நடிகை ஷோபனா உள்ளிட்டவர்கள் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடமிருந்து பத்மபூஷன் விருதைப் பெற்றார்கள்.

தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா, தெலுங்கு வழக்கப்படி 'பஞ்சகட்டு' பேட்டி, பட்டு சட்டை அணிந்து விருதைப் பெற்றார். 57 வருடங்களுக்கு முன்பாக அவரது அப்பா என்டி ராமராவ் பத்மஸ்ரீ விருதைப் பெற்றபோது அணிந்த 'பஞ்சகட்டு' கலாச்சார ஆடையையே பாலகிருஷ்ணா அணிந்ததை தெலுங்கு மக்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள்.

ஒரே குடும்பத்தில் பத்ம விருதுகளைப் பெறுவது அபூர்வமாக நடக்கும் ஒன்று. அப்பா என்டிஆர் பத்மஸ்ரீ விருதையும், மகன் பாலகிருஷ்ணா பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார்கள். என்டிஆருக்கு இந்திய அரசு வழங்கும் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே கோரிக்கை வைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !