பிளாஷ்பேக் : டி.எஸ்.பாலையா ஹீரோவாக நடித்த 'சண்பகவல்லி'
ADDED : 161 days ago
பழம்பெரும் நடிகரான டி.எஸ் பாலையா எம்ஜிஆருக்கு முன்னரே சினிமாவுக்கு வந்தவர். நாடகங்களில் வில்லனாக நடித்த அவர் திரைப்படங்களிலும் பெரும்பாலும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். அவற்றில் முக்கியமானது 'சண்பகவல்லி'.
இது விக்கிரமாதித்தன் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான படம். இந்தப் படத்தை லங்கா சத்யம் இயக்கியிருந்தார் . பாலையா ஜோடியாக பெரியநாயகி நடித்தார். இவர்களுடன் கேகே பெருமாள், ராஜகோபால ஐயர், ஏழுமலை சீனிவாசன், எம் எஸ் விஜயா, விஜயவாடா ராஜாராம் உள்பட பலர் நடித்திருந்தனர்.
ஸ்ரீ கந்தர் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தில் டி எஸ் பாலையா ரொமான்ஸ் மட்டும் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தார், என்றாலும் படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.