மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது
ADDED : 157 days ago
விடுதலை 2 படத்திற்கு பிறகு ஏஸ், ட்ரெயின் மற்றும் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, அடுத்தபடியாக பூரி ஜெகந்நாத் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். அதன்பிறகு மீண்டும் நிதிலன் சாமிநாதன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி பாக்ஸ் ஆபிசில் 190 கோடி(சீனாவையும் சேர்த்து) வசூலித்தது. இந்த நிலையில் சமீபத்தில் மகாராஜா படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை விஜய் சேதுபதியிடம் கூறி ஓகே செய்துள்ள நிதிலன் சுவாமிநாதன், தற்போது அப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.