உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார்

பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார்


நடிகர் அஜித்குமார் இரண்டு தினங்களுக்கு முன்பு டில்லியில் பத்மபூஷன் விருதைப் பெற்றார். தனது குடும்பத்துடன் சென்ற அஜித்குமார் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை பத்திரிகையாளர்கள் பேட்டி எடுத்தனர். அஜித் பொதுவாக மீடியாக்களை சந்திப்பதில்லை. இருந்தாலும் பத்மபூஷன் விருது பெற்றதற்காக எப்படியும் பேசுவார் என நேற்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அஜித்திற்கு காலில் லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து இன்று சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் பிஸியோதெரபி சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

அஜித் எப்போதுமே பொலிவுடன் காணப்படுவார். ஆனால், சென்னையில் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியைப் பார்த்த போதும், டில்லி சென்று திரும்பிய போதும் அவரது தோற்றத்தைப் பார்த்த பலருக்கும் ஒரு வருத்தம் தொற்றிக் கொண்டுள்ளது. அவர் மிகவும் களைப்பாகக் காணப்படுவதாகப் பேசி வருகிறார்கள். தொடர்ந்து கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளதால் இப்படியிருக்கிறாரோ என்றும் கமெண்ட்டுகள் வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !