ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்'
ADDED : 154 days ago
தூத்துக்குடியை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரும், சுதேசி இயக்கத்தின் முன்னோடியுமான வ.உ.சிதம்பரம்-ன் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் நாவாய் என்ற புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. அரன் நிறுவனம் தயாரிக்க, பார்கவன் சோழன் இயக்குகிறார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக இப்படம் இருக்கும் என தெரிவித்துள்ளனர். கதாபாத்திரங்களின் உருவாக்கம், காலப்பிரதேச அமைப்புகள், பழங்கால சூழ்நிலை கட்டமைப்புகள் என அனைத்தும் ஏஐ மூலம் உருவாக்கி, வரலாற்று தகவல்களை மையமாக கொண்டு இப்படம் உருவாவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மதுரை ஆதினம் வெளியிட்டார்.