மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
154 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
154 days ago
மே 1ம் தேதி நாளை தமிழில் 'ரெட்ரோ', தெலுங்கில் 'ஹிட் 3', ஹிந்தியில் 'ரெய்டு 2' ஆகிய படங்கள் எதிர்பார்ப்பை அதிகம் ஏற்படுத்தியுள்ள படங்களாக இருக்கின்றன. இவற்றில் எந்தப் படம் பெரும் வசூலைப் பெறப் போகிறது, விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெறப் போகிறது என அந்தந்த மொழிகளில் திரையுலகினர், ரசிகர்களின் ஆர்வத்தில் உள்ளது.
ஆன்லைன் முன்பதிவைப் பொறுத்தவரையில் மேலே குறிப்பிட்ட மூன்று வெவ்வேறு மொழிப் படங்களில் தெலுங்குப் படமான 'ஹிட் 3' படம் முன்பதிவில் முந்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒரு குறிப்பிட்ட ஆன்லைன் முன்பதிவு தளத்தில் கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் இப்படத்திற்கு சுமார் 12 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கடுத்து தமிழ்ப் படமான 'ரெட்ரோ' படத்திற்கு கடந்த ஒரு மணி நேரத்தில் 6 ஆயிரம் முன்பதிவுகளும், ஹிந்திப் படமான 'ரெய்டு 2' படத்திற்கு 3 ஆயிரத்திற்கு சற்றே கூடுதலான முன்பதிவுகளும் நடந்துள்ளன.
இந்தப் படங்களின் டிரைலரைப் பொறுத்தவரையில் 'ஹிட் 3' டிரைலர் 25 மில்லியன் பார்வைகளையும், 'ரெட்ரோ' டிரைலர் 22 மில்லியன் பார்வைகளையும், 'ரெய்டு 2' டிரைலர் 54 மில்லியன் பார்வைகளையும் டி யுடியூபில் பெற்றுள்ளன. டிரைலர் வரவேற்புக்கும், முன்பதிவு வரவேற்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. அது போலவே வசூலும் அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
154 days ago
154 days ago