மேலும் செய்திகள்
ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள்
152 days ago
250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி'
152 days ago
'' மொபைல்போன் யுகத்தில் இளைஞர்கள், சில பெரியவர்களுக்கு பாரத நாட்டின் சம்பிரதாயம், கலாசாரத்தின் அருமை பெரிமை தெரியாமல் உள்ளனர்,'' என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி பேசிய வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த வீடியோவில் ரஜினி கூறியுள்ளதாவது: மொபைல்போன் யுகத்தில் நமது இளைஞர்கள் சில பெரியவர்கள் பாரத நாட்டின் சம்பிரதாயம், கலாசாரம் அருமை பெருமை தெரியாமல் உள்ளனர். தங்களது கலாச்சாரம் பாரம்பரியத்தில் நிம்மதி, சந்தோஷம் கிடைக்கவில்லை என்று கூறி மேற்கத்திய நாடு சேர்ந்தவர்கள் இந்தியாவை நோக்கி வருகின்றனர். இங்கு தான் நிம்மதி, சந்தோஷம் கிடைக்கிறது என்கின்றனர். தியானம், யோகா இயற்கையான வாழ்க்கை அதை நோக்கி வருகின்றனர். நமது கலாசாரம். அருமை பெருமைகளை இளைஞர்களிடம் சேர்க்க வேண்டும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு ரஜினி பேசியுள்ளார்.
152 days ago
152 days ago