உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சசிகுமாரின் அடுத்தடுத்த பட இயக்குனர்கள் வரிசை

சசிகுமாரின் அடுத்தடுத்த பட இயக்குனர்கள் வரிசை

இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் அயோத்தி, நந்தன் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது அவரது நடிப்பில் 'டூரிஸ்ட் பேமிலி' படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கும் ஓரளவுக்கு பாசிடிவ்வான விமர்சனங்கள் வந்துள்ளன. இதையடுத்து சசிகுமார் தான் நடிக்க போகும் படங்களுக்கு இயக்குனர்களை வரிசைக்கட்டி வைத்துள்ளார். அதன்படி, பூ சசி, சலீம் நிர்மல் குமார், யாத்திசை தரணி ராஜேந்திரன், ராஜூ முருகன் மற்றும் பாலா அரண் உள்ளிட்ட இயக்குனர்களின் இயக்கத்தில் சசிகுமார் வரிசையாக படங்களில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இது அல்லாமல் சசிகுமார் குற்றபரம்பரை என்ற வெப் தொடரை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தாண்டு இறுதியில் ஒரு படத்தையும் இயக்க அவர் திட்டமிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !