கமலிடம் கதை சொன்ன அஸ்வத் மாரிமுத்து
ADDED : 199 days ago
ஓமை கடவுளே, டிராகன் படங்களை தொடர்ந்து தற்போது சிம்பு நடிப்பில் காட் ஆப் லவ் என்ற படத்தை இயக்க போகிறார் அஸ்வத் மாரிமுத்து. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கல்லூரி காதல் கதையில் உருவாகும் இந்த படத்திற்காக சிம்புவை இளமையான கெட்டப்புக்கு மாற்றியுள்ளார். இந்த நிலையில் கமலை சந்தித்து ஒரு கதை சொல்லி உள்ளார் அஸ்வத் மாரிமுத்து. ஆனால் இந்த படத்தில் கமல் நடிக்க போவது இல்லை. மாறாக அவர் தயாரிப்பில் உருவாக போவதாக சொல்கிறார்கள். சிம்பு பட பணிகளை முடித்த பின் கமல் தயாரிப்பில் இவரின் அடுத்த இயக்கம் பற்றிய அறிவிப்பு வரும் என தெரிகிறது.