பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை
ADDED : 389 days ago
ஏஸ், டிரெயின் படங்களை முடித்துவிட்டு பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். இதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கின்றார். இவர்களுடன் செம்பியான் வினோத் ஜோஷ், யோகி பாபு, ரோஷினி ஹரிபிரியன், தீபா, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதும் நிறைவு பெற்றது. படத்தின் தலைப்பு டீசர் வீடியோ நாளை மே 03ம் தேதி அன்று வெளியாகிறது. இதையொட்டி இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதன் ஆடியோ உரிமத்தை தின்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர்.