மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா
ADDED : 241 days ago
கடந்த சில வருடங்களாக நடிகர் ஜீவா நடித்து வெளியான படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ஆனாலும், விடாமுயற்சியுடன் ஜீவா புதிய கதை களத்துடன் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது மலையாளத்தில் வெளியான பலிமி படத்தின் இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். முழுக்க முழுக்க தமிழில் உருவாகும் இப்படம் ஜீவாவின் 45வது படமாகும். இதில் தம்பி ராமையா, ஜெய்வந்த் மற்றும் பிரார்த்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை நிகழ்வு நடைபெற்றுள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.