மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
151 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
151 days ago
இன்றைய 2கே கிட்ஸ்கள் பார்த்து ரசிப்பதற்காகவே 20 வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த சில சிறப்பான படங்களை ரீரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த விதத்தில் சமீப காலங்களில் அவ்வப்போது இப்படியான படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
விஜய், ஜெனிலியா நடித்த 'சச்சின்' படம் ரிரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடியது. அதன் வெற்றிவிழாவில் படத்தின் தயாரிப்பாளர் தாணு, அடுத்து 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' மற்றும் 'காக்க காக்க' ஆகிய படங்களை விரைவில் ரீரிலீஸ் செய்ய உள்ளோம் என்று அறிவித்தார்.
'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' படம் 2000ம் ஆண்டில் மே 5ம் தேதி வெளியானது. நாளையுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதையொட்டி படத்தின் ரீரிலீஸை படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், மம்முட்டி, அஜித், அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தபு, பேபி ஷாமிலி, மணிவண்ணன் மற்றும் பலர் அப்படத்தில் நடித்துள்ளனர்.
விரைவில் ரிரிலீஸ் ஆக உள்ள இப்படத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அப்போது வெளியான போது சுமார் 3 மணி நேரம் ஓடிய படத்தைத் தற்போது சில பல காட்சிகளைக் குறைத்து இரண்டரை மணி நேரப் படமாக வெளியிட உள்ளார்களாம்.
வசூல் ரீதியாக அப்போது பெரும் வெற்றி பெறவில்லை என்றாலும் '2 கே' காலத்தில் வந்த ஒரு கிளாசிக்கான படம் என்ற பெருமையைப் பெற்ற ஒரு படம்.
151 days ago
151 days ago