இந்த வாரம் 10 படங்கள் ரிலீஸ்
ADDED : 152 days ago
கோடை விடுமுறையை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகும், விடுமுறை காலங்களில் மக்கள் குடும்பத்தோடு திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் அதை குறிவைத்து படங்கள் வெளியாகும். கடந்த வாரம் வெளியான படங்களில் 'டூரிஸ்ட் பேமிலி' நல்ல வரவேற்புடன் பேமிலி ஆடியன்சை பெற்றுள்ளது. ரெட்ரோ, ஹிட் படங்கள் கடும் வன்முறை படங்களாக அமைந்து விட்டதால் பேமிலி ஆடியன்சை இழந்து விட்டது.
இந்த நிலையில் இந்த வாரம் 10 சிறுபட்ஜெட் படங்கள் வெளியாகிறது. 'கஜானா, வாத்தியார் குப்பம், கீனோ, நிழற்குடை, என் காதலே, அம்பி, சவுடு, எமன் கட்டளை, கலியுகம், யாமன்' ஆகிய படங்கள் வெளிவருகிறது. இவற்றுடன் மலையாளத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'தொடரும்' படத்தின் தமிழ் பதிப்பும் வெளியாகிறது.