மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
149 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
149 days ago
ஆண்மை தவறேல், யாக்கை படங்களை இயக்கியவர் குழந்தை வேலப்பன். இவர் இயக்கிய வெப் சீரியஸ் ‛யுகம்'. இதில் இவரே கதை நாயகன். அவர் மனைவியாக நடித்தவர் நர்மதா. இவர் நிஜத்திலும் குழந்தை வேலப்பன் காதல் மனைவி. இந்த கதையும் புது முயற்சியில் எடுக்கப்பட்டுள்ளது.
காலை 9.30க்கு டைம் லூப்பில் மாட்டிக் கொள்ளும் மனைவி அதில் இருந்து மீண்டாரா என்பது கதை. இந்த படத்தின் மேக்கிங் வெர்ட்டிகள் கேமரா ஆங்கிளில் அதாவது செல்போனில் நாம் ரீல்ஸ் பார்ப்பது போன்ற செங்குத்தாக காட்சிகள் இருப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது. இப்படி இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் படம் இது.
உலகளவில் இப்படி வெர்டிகள் ஆங்கிள் படங்கள் வருகின்றன. அதற்கான திரைப்பட விழாக்கள், கருத்தரங்கம் நடக்கின்றன. செல்போன் மாதிரி வெர்ட்டிகிள் படம் பார்க்கிற டிவியே ஐரோப்பாவில் வந்து விட்டது. இனி செல்போனில் ரீல்ஸ் பார்ப்பது மாதிரி, வெர்ட்டிகிளாக பார்க்கிற படங்கள் அதிகம் வரும். அதற்கான ரசிகர்கள் உருவாவார்கள் உலக அளவில் அதற்கான முயற்சி தொடங்கி விட்டது என்கிறார் குழந்தை வேலப்பன்.
149 days ago
149 days ago