வேலை நாட்களில் ஏமாற்றமடையும் ரெட்ரோ
ADDED : 148 days ago
சூர்யா நடித்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் கடந்த மே 01 அன்று வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் முதல் நான்கு நாட்களில் தமிழகத்தில் சுமார் 45 கோடி வரை வசூல் செய்தது. விடுமுறை தினங்கள் என்பதால் திரையரங்குகளில் நல்ல கூட்டம் இருந்தது.
ஆனால் விடுமுறை தினங்கள் முடிந்து வேலைநாட்கள் வந்ததால் எதிர்பார்த்த கூட்டம் காலை காட்சிகளுக்கு வரவில்லை என்று திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக இருக்கிறது. மாலை காட்சிகளுக்கு மட்டுமே சுமாரான கூட்டம் வருவதாகவும் மற்ற எந்த காட்சிகளுக்கும் எதிர்பார்த்த கூட்டம் இல்லை என்பதே உண்மை தகவல் என்று கூறப்படுகிறது.