டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு வரவேற்பு : அதிகரிக்கும் தியேட்டர்கள்
ADDED : 194 days ago
சசிகுமார், சிம்ரன் மற்றும் பலர் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுயிருக்கிறது. இந்த படத்தை அபிஷந்த் ஜீவிந்த் இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் குறைவான தியேட்டர்கள் கிடைத்தாலும் நாட்கள் செல்ல செல்ல இந்த படத்தை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் நேற்று முதல் தமிழகத்தில் கூடுதலாக பல திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை வெளியிட்டதாகவும், இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்குகளில் காட்சிகளை அதிக படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தயாரிப்பு நிறுவனம் சந்தோசத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் வசூலின் தாக்கமும் அதிகமாக இருப்பதால் இந்த திரைப்படம் பெரிய லாபத்தை ஈட்டி தரும் என்பதே இங்கு பல திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக நிலவுகிறது.