மேலும் செய்திகள்
கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்'
148 days ago
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
148 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
148 days ago
தமிழ் சினிமாவில் மூத்த காமெடி நடிகர் கவுண்டமணி. 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார். இவரது மனைவி சாந்தி, உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.
இரங்கல் கூட தெரிவிக்காத நடிகர்கள்
பொதுவாகவே திரையுலகில் உள்ள பலர், சக நடிகர்கள் இறந்தால் கூட அஞ்சலி செலுத்த செல்வதில்லை. ஏன் ஒரு இரங்கல் கூட தெரிவிப்பதில்லை. அது கவுண்டமணியின் மனைவிக்கும் நிகழ்ந்துள்ளது. இத்தனைக்கும் கவுண்டமணி பல திரைப்பிரபலங்கள் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார். ஆனால் இன்றைக்கு அவரது மனைவி இறந்துள்ள நிலையில் நடிகர்கள் பலர் ஒரு இரங்கல் கூட தெரிவிக்காமல் உள்ளனர்.
ரஜினி, கமல், அஜித் ஆகியோரின் படங்களில் கவுண்டமணி நடித்துள்ளார். ஆனால் இந்த மூவருமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. ஒருவேளை இவர்கள் வெளியூர்களில் இருந்தால் கூட ஒரு இரங்கலாவது தெரிவித்திருக்கலாம். அதுவும் செய்யவில்லை. இதேப்போல் சூர்யா, விக்ரம், சிம்பு, விஷால் ஆர்யா, சிவகார்த்திகேயன், நடிகைகளான திரிஷா, நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இரங்கல் தெரிவிக்கவில்லை. அதேப்போல் காமெடி நடிகர்களாக இருந்து இப்போது ஹீரோக்களாக பயணித்து வரும் சந்தானம், சூரி, யோகிபாபு போன்ற நடிகர்களும் அஞ்சலி செலுத்தவில்லை, இரங்கலும் தெரிவிக்கவில்லை.
விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி
சாந்தியின் உடல் கவுண்டமணியின் இல்லமான சென்னை, தேனாம்பேட்டையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சாந்தி மறைவு செய்தி கேட்டு ஏராளமான திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கவுண்டமணிக்கு ஆறுதல் கூறினர். நடிகரும், தவெக., தலைவருமான விஜய் நேரில் சென்று சாந்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். சத்யராஜ், சுந்தர் சி, செந்தில், ஜின்னி ஜெயந்த், வையாபுரி, அம்பிகா, கேஎஸ் ரவிக்குமார், பாண்டியராஜ், சித்ரா லட்சுமணன், ராஜேஷ், கருணாஸ், கார்த்தி, பிரகாஷ் ராஜ், பி வாசு, நிழல்கள் ரவி, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் சாந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, கவுண்டமணிக்கு ஆறுதல் கூறினர்.
உடல் தகனம்
இன்று சாந்தியின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.
148 days ago
148 days ago
148 days ago