ரெட்ரோ வெற்றி: 10 கோடி அன்பளிப்பாக கொடுத்த சூர்யா
ADDED : 148 days ago
ஒரு வெற்றிக்காக பல ஆண்டுகள் காத்திருந்தார் சூர்யா. ரெட்ரோவில் அது கிடைக்க, சென்னை நட்சத்திர ஓட்டலில் மீடியாவை அழைத்து நன்றி அறிவிப்பு விழா நடத்தினார். அதுமட்டுமல்ல, அகரம் பவுண்டேசனுக்கு 10 கோடி நன்கொடை கொடுத்துள்ளார். 'படிப்புக்காக உதவி கேட்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவர்களுக்கு உதவும் வகையில் இந்த தொகையை அளிக்கிறேன். பகிர்தலே மகிழ்ச்சி' என சூர்யா கூறியுள்ளார். தமிழ் சினிமா சரித்திரத்தில் எந்த ஹீரோவும் இதுவரை 10 கோடி அளவுக்கு நன்கொடை கொடுத்தது இல்லை.. அந்தவகையில் நிதி உதவி விஷயத்தில் சூர்யா புது சாதனையும் படைத்து இருக்கிறார்.