உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாகும் கயாடு லோகர்

ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாகும் கயாடு லோகர்

டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கயாடு லோகர். இன்றைய இளைஞர்கள் மத்தியில் கிரஷ் ஆக இவர் மாறியுள்ளார். டிராகன் படத்தை தொடர்ந்து சிம்புவின் 49வது படத்திலும் இவர் நடிக்க உள்ளார். சமீபத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானது. இதையடுத்து இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கயாடு லோகர் கதாநாயகியாக இணைந்துள்ளார். ஏ.கே. புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். படத்தின் முதல்பார்வை மே 9ம் தேதியன்று வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !