உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏஸ் படத்தில் பெண் வேடத்தில் யோகி பாபு

ஏஸ் படத்தில் பெண் வேடத்தில் யோகி பாபு

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி அவரது 51வது படமாக 'ஏஸ்' படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இவர்கள் தவிர்த்து யோகி பாபு, திவ்யா பிள்ளை, ராஜ்குமார் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பை பெரும்பாலும் மலேசியாவில் நடத்தினர். வருகிற மே 23ம் தேதி அன்று படம் திரைக்கு வருகிறது. யோகி பாபு இந்த படத்தில் பெண் வேடமிட்டு சில காட்சிகளில் வித்தியாசமாக நடித்துள்ளார் என சில போட்டோக்களை படக்குழு பகிர்ந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !