மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
145 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
145 days ago
இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார் ஜிவி பிரகாஷ். கடைசியாக இவர் நடித்த இவரது 25வது படமான கிங்ஸ்டன் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அடுத்தப்படியாக மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. நாயகியாக ‛டிராகன்' புகழ் கயாடு லோஹர் நடிக்கிறார். ஏ.கே.புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் வெங்கட்பிரபு வெளியிட்டனர். படத்திற்கு 'இம்மார்டல்' என தலைப்பு வைத்துள்ளனர். மர்மங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் இப்படம் உருவாகிறது. படம் தொடர்பாக இரு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு போஸ்டரில் பாத் டப்பினுள் ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் ஆகியோர் மது அருந்தியபடி குளிப்பது போன்று வடிவமைத்துள்ளனர்.
145 days ago
145 days ago